Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 10.41 விழுக்காடு வாக்குப்பதிவு.!!

உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related image

இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். முன்னதாக, முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Categories

Tech |