செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கேரளாவில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரையில் தண்ணீர் எட்டுவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக அணையை திறந்து விட்டு இருக்கிறார்கள். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலந்துரையாட வேண்டும். இது குறித்ததமிழக அரசின் நிலைப்பாட்டை விவசாயிகளின் நலன்கருதி அதற்கான விவரத்தை அறிவிக்க வேண்டும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டில் மேல்முறையீடு குறித்து பேசிய அவர், “மேல்முறையீடு செய்வது வரவேற்க தகுந்தது தான். ஆனால் அடிப்படையான காரணிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்கின்ற அந்த காரணிகளை பூர்த்தி செய்யாமல் மேல் முறையீடு செய்வதில் பயன் கிட்டுமா ? என்று விளங்கவில்லை.
மேல்முறையீடு செய்வதால் எந்த அளவுக்கு அது பயன் விளையும் என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லியிருக்கிற மிக முக்கியமான சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை. இவர்கள் எந்த அளவுக்கு இப்படி தொகுப்பாக இருப்பதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கான விவரங்கள் இல்லை.
அதாவது MBC க்கு 20 விழுக்காடு என்று தொகுப்பாக இருப்பதால் குறிப்பிட்ட சமூகத்தினரை எந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்கிறர்கள் என்பதற்கான புள்ளி விபரம் தேவை. எனவே இந்த தகவல் இல்லை என்பதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாததால் எவ்வளவு சதவீத மக்கள் தொகை என்பதும் தெரியாது இருக்கிறது என்ற காரணங்களை சொல்லி இருக்கிறார்கள் அந்த காரணங்களை கலைவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.