பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்..
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
அந்தவகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன், எம் பி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பசும்பொன் சென்ற ஓபிஎஸ் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் 10.5 கிலோ எடையுள்ள தேவர் வெள்ளி கவசத்தை வழங்கியுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. அந்த அடிப்படையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 10.5 கிலோ எடையுள்ள வெள்ளிகவசத்தை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக வெள்ளி கவசம் வழங்குவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது..