ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் துணிச்சலுடன் பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊமாரெட்டியூர் பந்தல்கரடு பகுதியில் மக்கள் சில பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வெளிச்சம் இல்லாததால் அவர்கள் டார்ச் லைட் அடித்தபடி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையில் ஏதோ நெளிந்து செல்வது போல் இருந்தது. இதனையடுத்து அவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்கே ஓடி வந்து அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பின் அந்த மலைப்பாம்பை வாலிபர்கள் வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு பிடிபட்ட அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் சென்னம்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்