சென்னையில் 10 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து விட்டு மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் மூன்றாவது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அதே குடியிருப்பில் வசித்து வந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை இவர் வீட்டிற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மூன்றாவது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசி கொலை செய்து உள்ளார்.
ஆனால் இதனை அக்கம்பக்கத்தினர் பார்க்க உடனடியாக காவல் நிலைய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடனடியாக சுரேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.