ஆஸ்திரேலியா இந்தியா மோதிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சளர்கள் 10 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. நேற்று நடந்த இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்து அசத்தலான வெற்றி பெற்றது.
முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த போது 13ஆவது ஓவரை எலீஸ் பெர்ரி வீசினார். முதல் பந்தில் இந்திய அணி வீராங்கனை கவுர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ஆம் பந்தில் பாட்டியா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 5ஆம் பந்தில் DB சர்மா ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து 14ஆவது ஓவரை வலேமின்க் வீசினார். அதில் முதல் பந்தில் கிருஷ்ணமூர்த்தி 8 ரன்னில் ஆட்டமிழக்க 4ஆவது பந்தில் ரெட்டி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 10 பந்துகளில் 5 விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தியது.இந்த போட்டியில் ஆட்டநாயகியாக ஆஸ்திரேலியான் எலீஸ் பெர்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10 balls
5 wickets #AUSvIND #T20Triseries pic.twitter.com/rH9cjbw9jY— Women’s CricZone (@WomensCricZone) February 2, 2020