சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உடனடியாக விரைவாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்து இருக்கிறது.