Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனமழையின் காரணத்தினால்….. தீடீரென ஏற்பட்ட வெள்ளம்….. தீயணைப்பு துறை வீரர்களின் பாராட்டுக்குரிய செயல்…..!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகளை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எலத்தூர் கிராமத்தில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று 10 – மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதனைப் பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை  வீரர்கள் நீண்ட நேரம் போராடி 10 மாடுகளை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |