Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு… ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திட்டமிட்டபடி 10ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான பணிகள் குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், ” பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் பொதுத்தேர்வு இம்மாதமே நடைபெறவுள்ளது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 31ம் தேதி வரை ஊரடங்கு இருப்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. எனவே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 12ம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் 11 வகுப்புகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வுக்கான புதிய அட்டவணை:

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 20 – விருப்பப்பாடம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்
ஜூன் 25 – தொழிற்கல்வி தேர்வுகள்.

Categories

Tech |