வயலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வயலில் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெற்கதிர்களுக்குள் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நெற்கதிர்களுக்குள் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.