Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோயின்றி வாழ இயற்கயான10 வழிமுறைகள்!!..

அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள்  நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக.

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும்.

2. துளசி இலைகள்  போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது.

3. கால் தேக்கரண்டி கரு மிளகு தூல்    3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒரு கோப்பை நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் உடல் எடை குறைவதை காணலாம்.

5. தினமும் காலையில் தொடர்ந்து 12 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6.அரிசி , உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்து  அதற்க்கு பதிலாக கோதுமையுனாள்   செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

7. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு தினமும் குளிக்க வேண்டும் இதனால் விரைவில் தழும்புகள் மறையும்.

8. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தனை கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் மற்றும் காய்ச்சல்  குணமாக்கும்.

9. கேரட் மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும்.

10. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதும் உடனே நிவாரணம் கிடைக்கும்.

Categories

Tech |