Categories
தேசிய செய்திகள்

10கி.மீ….. 20,000 கோழி அழிப்பு…… முட்டை விற்க தடை….. கேரளாவில் பரபரப்பு…..!!

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில்  கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின்   எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா  வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள  சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதிகளில் இருந்து  10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எந்த கோழிக்கறி இறைச்சியும், முட்டையும் விற்கக்கூடாது என்றும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Categories

Tech |