Categories
மாநில செய்திகள்

தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி… விஜயகாந்த் அறிவிப்பு…!!

தேமுதிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் விஜயகாந்த் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |