Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மிளகாய் பொடி தூவிட்டு போயிருக்காங்க” அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… திருச்சியில் பரபரப்பு…!!

ஜன்னல் கம்பியை அறுத்து 10 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நஜிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் நஜிமா வீட்டை பூட்டி விட்டு கடந்த 25-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்களின் உறவினரான சலீம் என்பவர் நஜிமா வீட்டின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சலீம் உடனடியாக நஜிமாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி நஜிமா விரைந்து சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளது.

ஆனால் அங்கு வந்த மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். மேலும் மர்ம நபர்கள் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக வீட்டினுள் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |