Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை விற்பனை செய்தால்….. 10 லட்ச ரூபாய் வரை அபராதம்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தற்போது மாற்று வழியாக ஆம்னி பேருந்து, பார்சல் சர்வீஸ், மற்றும் கொரியர் ஆகியவற்றை பயன்படுத்தி போதை பொருட்களை அனுப்புகின்றனர்.

இதுகுறித்து அறிந்தால் 8608600100 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்தால் 1 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின் போது இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிவகங்கை போலீஸ் துணை சூப்பர் வண்டியில் சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |