உலக சுகாதார மையமானது இந்த வருடத்தில் உலகம் முழுக்க கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் இது மிக வேதனையான மைல்கல் எனவும் கூறி இருக்கிறது.
உலக சுகாதார மையத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதானோம், தெரிவித்திருப்பதாவது, கொரோனா பரவல் தற்போது வரை முழுவதுமாக அடங்கவில்லை. இந்த வருடத்தில் மட்டும், தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜூன் மாத முடிவிற்குள் 70% மக்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும்.
எனினும் 136 நாடுகளில் தற்போது வரை இது பூர்த்தி செய்யப்படவில்லை. 66 நாடுகளில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 40க்கும் குறைவாக இருக்கிறது. மிக வேதனையான மைல்கல்லை அடைந்திருக்கிறோம். கொரோனா தொற்று குறைந்ததாக நினைக்க வேண்டாம். கடந்த இரண்டரை வருடங்களாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், இந்த வருடத்தில் மட்டும் 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலிலிருந்து காத்துக் கொள்வது முக்கியம். பெரியவர்கள், சுகாதார ஊழியர்கள், வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு தடுப்பூசி அளிக்க முயற்சி மேற்கொள்ளுமாறு அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.