தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் .
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு செல்வதாக தெரிவித்தனர் இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது அதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீது தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஈர்த்துக் கொள்வதாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரசேகராவ் கட்சிக்கு தாவுகிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட தகவலில் எல்லா ரெட்டி காங்கிரஸ் M.L.A ஏ ஜிஜீலா சுரேந்தர் டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே டி ராமராவ்_வை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு அவர்கள் தங்கள் கட்சியில் சேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைந்த நிலையில் சுரேந்தர் 10_ஆவது எம்எல்ஏ_வாக இணைந்த்துள்ளார்.