அரசு போடப்பட்டுள்ள சட்டத்தை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்தன. இருந்தாலும் கொரோனா பயம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கான தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு விடுத்துள்ள தடையை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு காந்தி சாலையில் பாதாள விநாயகர் கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.