Categories
அரசியல் மாநில செய்திகள்

10 MLAக்கள்…. EPSக்கு திடீரென அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…. இது புதிய டுவிஸ்ட்…..!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி புதிய பரபரப்பை கிளப்பினார்.

இது குறித்து பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் தங்களோடு பேசுவதாக இபிஎஸ் சொல்லியுள்ளார். முதலில் அவர் கட்சி எம்எல்ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர் இருப்பது தற்காலிக பதவி தான். தானும் உயிர் வாழ்வதாக காட்டிக் கொள்ள இப்படி பேசுகிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |