10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு இந்த வருடம் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படாமல் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இருக்கும் நாட்களுக்கு ஏற்ப கல்வியாளர்கள் உடன் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.