Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது.

2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா ? பேருந்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பேருந்தில் இருந்த காம கொடூரன்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார்.

பிறகு இருவரும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் பேருந்திலிருந்து சாலையோரத்தில் தூக்கி வீசி எறியப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தின் குற்றவாளிகள் ராம்சிங் (பேருந்து ஓட்டுநர்) முகேஷ் சிங் (ராம் சிங்கின் சகோதரர்) வினய் சர்மா (உடற்பயிற்சியாளர்) பவன் குப்தா (பழ விற்பனையாளர்) அக்ஷய்குமார் தாகூர் (பேருந்தின் உதவியாளர்) அதுமட்டுமல்லாது 16 வயது நிரம்பிய ஒரு சிறுவனும் இந்த ஆறு பேர் தான் இந்த படுபாதக செயலை செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் நிர்பையாவையும், அவரது ஆண் நண்பர் இருவரையும் பேருந்தில் இருந்து தூக்கி எறிந்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு டிசம்பர் 2012 ஆம் ஆண்டு இந்த ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு , சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி முதல் குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார்.

இதையடுத்து மைனர் குற்றவாளியான இளம் சிறுவனுக்கு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தண்டனை கிடைத்தது. அவன் மைனர் குற்றவாளி என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதிகபட்சமாக மைனருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே சீர்திருத்தப்பள்ளியில் சிறைவாசம். இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங் , வினய் சர்மா , பவன் குப்தா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி விசாரணை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த நாள்வரும் 2014ம் ஆண்டு மேல்முறையீடு செய்ததில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தாலும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது. முதல் குற்றவாளி ராம் சிங்கும் , மைனர் குற்றவாளியும் தான் நிர்பயாவை கடுமையாக தாக்கியதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்தது. இந்நிலையில் மைனர் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை ஆன போதும் , பாதுகாப்பு கருதி அவர் NGO என்ற அரசு சாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த வழக்கிற்கு பிறகு சிறுவர் குற்றவியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டால், அவர்களை மைனர்களாக கருதக்கூடாது. வயது வந்தவர்களாகவே கருத வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க இருந்த 16 வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 20ஆம் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட வேண்டும் என்ற உத்தரவு விதிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு , சீராய்வு மனு தாக்கல் , மறுசீராய்வு மனு , கருணை மனு என இந்த 4 வாய்ப்புகளும் நிறைவடைந்த நிலையில் நாளை மறுநாள் தூக்கு நிறைவேற்றப்பட இருக்கின்றது. இதனிடையே அவர்கள் 4 பேரும் தண்டனையை காலதாமதம் செய்யும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

சிறையின் சுவற்றில் தன்னைத்தானே தாக்கி கொள்வது , மனநலம் பாதிப்போடு உள்ளோம் என்று அடுத்தடுத்த மனுவை தாக்கல் செய்த நிலையில் இவ்வளவு காலம் தண்டனையை தாமதப்படுத்தியுள்ள 4 பேரும் இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச நீதிமன்றத்தையும் நாடினர். மேலும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்த குற்றவாளி முகேஷ் சிங் 2012-ஆம் ஆண்டு பாலியல் சம்பவம் நடக்கும் போது, அந்த இடத்தில் தாம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தான். அனைத்து மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீடீர் திருப்பமாக நேற்று இரவு 10 மணிக்கு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு தூக்கு தண்டனையை தொடரலாம் என உத்தரவிட்டது.

supreme courtக்கான பட முடிவுகள்

இதையடுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை உறுதியாகிவிட்டது என நாடு முழுவதும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற 4 மணி நேரமே இருந்த நிலையில் பவன்குப்தா சார்பில் அதிகாலை உச்சநீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது. தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய அந்த மனு அதிகாலை 2.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியது.

குற்றவாளிகள் 4 பெரும் கிடைக்கின்ற சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்பிக்க , காலதாமதம் படுத்த மேற்கொண்ட அனைத்தும் முடிந்து , மரண பயத்திற்குள்ளாகி இன்னும் சிறிது நேரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது.

Categories

Tech |