Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஓமந்தாரர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சிவில் இன்ஜினீயர், வடபழனியை சேர்ந்த 78 முதியவர், பேரவள்ளூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, ராணிப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண் உள்ளிட்ட 10 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |