Categories
உலக செய்திகள்

காபூலில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்.. 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. அமெரிக்க அதிபர் எடுத்த முடிவு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் சிறுவர்கள் ஏழு பேர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபர்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான சம்பவத்தில் அதிபர் ஜோ பைடன் இழப்பீடு அளிக்க தீர்மானித்திருக்கிறார்.

அமெரிக்க இராணுவத்தின் கவனக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பணியாளரும் 7 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது நபர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வாகனம் என்று கருதிய அமெரிக்க படை, ட்ரோன் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. எனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இக்குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முடிவு எடுத்துள்ளார். மேலும் மீதமிருக்கும் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 22 வயதுடைய ஃபர்ஷத் ஹைதாரி என்பவர் அமெரிக்காவை நம்புவதற்கு தயாராக இல்லை என்றும் நேரடியாக, காபூலுக்கு வந்து மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறியிருக்கிறார்

Categories

Tech |