Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கூச்சலிட்டுக்கொண்டே சென்றதால்… வந்த மோதல்… பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னசெட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதி வழியாக கூச்சலிட்டுக்கொண்டே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களிடம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் சின்னசெட்டிகுறிச்சியிலிருந்து அவர்களது நண்பர்களையும் வரவழைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளை கல்லால் எரிந்து தாக்கியுள்ளனர். இதனால் வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் அங்கிருந்த பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக சண்டையை தடுத்து நிறுத்தி படுகாயம் அடைந்த 10 பேரை அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |