இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என கூறி நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு சமூக நீதி போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு தொடர்பாக சட்ட ஆலோசகர் களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.