Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு – அசத்திய அமைச்சரவை …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார்.

நீட் தேர்வை பொருத்தவரை புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து இருக்கக்கூடிய 16 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தனியார் பள்ளியில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றார்கள். ஆகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றார்.

உச்சநீதிமன்றத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கமுடியாது என்று அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். அமைச்சரவையின்  முடிவு குறித்து கோப்புகள் தற்போது ஆளுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.ஆளுநர் ஒப்புதல் அளித்தால் செல்லும் எனவே ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா ? என்பது இனி தான் தெரியவரும்.

Categories

Tech |