சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா நாட்டின் ஷாபெல் பகுதியில் இருக்கும் ஜவுகர் மாவட்டத்தில் ஒரு ராணுவ வாகனம் பலாட் மாவட்டத்தை நோக்கி சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வாகனத்தில் இருந்த வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அல் ஷபாப் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பு ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அல் ஷபாப் இயக்கம், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகொண்டது. சோமாலியா நாட்டிற்குள் புகுந்து அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக அந்த இயக்கம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஐ.நா சபையின் மனிதநேயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.