சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது. ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, வர்த்தகப் போரை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை 12 சுற்றுகள் முடிந்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் வேளாண் பொருட்களை சீனா வாங்காத காரணத்தினால், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க டொனால்ட் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.