சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூந்தலூர் வடமட்டம் சாலை கடந்த 10 வருடங்களுக்கு மேல் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்த சாலை வழியாக குடவாசல் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு வடமட்டம், பரவக்கரை, சற்குணேஸ்வரர், அன்னியூர் போன்ற கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை இந்த சாலை வழியாகத்தான் விற்பனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கிறது. இந்நிலையில் சாலை மோசமாக இருப்பதால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.