குழந்தை இல்லாத காரணத்தினால் போலீஸ் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார் இவரின் மனைவி சீலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் இன்னும் குழந்தை இல்லை. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் பயன் இல்லை. இதனால் இந்த தம்பதிகள் விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சுரேஷின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் சடலமாக கிடந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத இயக்கம் இருவரும் தற்கொலை செய்யத் தூண்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.