Categories
அரசியல் மாநில செய்திகள்

10 வருஷ பிளான்…. 2 மடங்காக யோசித்த DMK அரசு…. கலக்க போகும் மின்சாரத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியை பொருத்தவரைக்கும் ஒன்றரை வருடம் ஆகி இருக்கு. இந்த ஒன்றரை வருடத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முதலமைச்சர் 8௦ விழுக்காட்டுக்கு மேல நிறைவேற்றிட்டாங்க. அதேபோல பார்த்தீங்கன்னா…  மின்வாரியத்தில் 20 ஆயிரம் மெகாவாட்கள் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொல்லி தேர்தல் வாக்குறுதில இருக்கு.

6000 மெகாவாட் சோலார்,  5000 மெகாவாட் காற்றாலை.  அதேபோல 3000 மெகாவாட் கேஸ்,  2000 மெகாவாட் பவர் ஸ்டோரேஜ். அப்போ மீதம் இருக்கக்கூடிய தெர்மல் பிளான்ட்ல  இருக்கக்கூடிய 6000 மெகாவட் அளவிற்கு நிறைவு பெறாத பணிகளும் முடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. மின்வாரியம் தொடங்கிய நாளிலிருந்து 2021 வரைக்கும் 32 ஆயிரத்து 500 மெகாவாட் தான் மொத்தமாக இருக்கு. அதாவது மின்சார வாரியத்தோட சொந்த நிறுவுதல், தனியார் கொள்முதல் செய்ததெல்லாம் சேர்த்து 32 ஆயிரத்து 500 வச்சுக்கோங்க.  அடுத்த 10 ஆண்டுகளில் 2030க்குள்ள 65,000 மெகாவாட் அளவிற்கு….

10 ஆண்டுகளில் மின்வாரியம் தொடங்கியதிலிருந்து 2021 வரை இருக்கக்கூடிய உற்பத்தியை 10 ஆண்டுகளில் அப்படியே இரட்டிப்பாக்கக் கூடிய அளவிற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட திட்டங்களில்  நிறைவேற்றக்கூடிய பணிகள். நிதி நிலைமை இருக்கு, நிதிச் சுமைகள் இருக்கு. ஏற்கனவே கடனில் இருக்கக்கூடிய மின்வாரியத்தை மேம்படுத்தக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. சீரமைக்கக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |