Categories
தேசிய செய்திகள்

“10 ஆண்டுகள்… 3 உடன்பிறப்புகள்… ஒரே அறையில்”… காரணம் இதுதான்..!!

10 ஆண்டுகளாக உடன் பிறந்த மூன்று பேர் ஒரே அறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று உடன்பிறப்புகளின் தாய் இறந்துவிட்டதால் குழந்தைகள் 3 பேரும் ஒரே அறையில் அடைத்து கொண்டனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. எவ்வளவோ கூறியும் கூட அவர்கள் வெளியில் வரவில்லை என அவரது தந்தை கூறுகிறார். அவரின் தந்தை ஓய்வு பெற்ற ஊழியர். அவருக்கு 35 ஆயிரம் ஊதியம் வரும். அதிலிருந்து தேவையான உணவை அவர் அறைக்கு வெளியே வைத்துவிடுவார், எனினும் அவரது உறவினர்கள் சிலர் தனது குழந்தையை மீது சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக அவர்கள் வெளியில் வராததால் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அண்டை வீட்டில் வசிப்பவர்கள் இடமிருந்து அழைப்பு வந்ததாக கூறி அவர்களை வீட்டிலிருந்து வெளியே மீட்டுள்ளனர். இது குறித்து பேசிய படேல்: “நாங்கள் அவர்களிடம் என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடிந்ததால் மூன்று உடன்பிறப்புகளுக்கும் மனநல பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. தாயின் மரணத்திலிருந்து கடுமையான அதிர்ச்சியை அடைந்துள்ளதால் அவர்கள் இவ்வாறு அறையிலேயே அடைந்து இருந்ததாக” அவர் தெரிவித்தார்.

Categories

Tech |