Categories
உலக செய்திகள்

பிச்சைக்கார மூதாட்டி”ரூ 6,32,00,000” பிரபலமான கோடீஸ்வரி…!!

லெபனான் நாட்டில் பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் 6 கோடியே 37 லட்சம் ரூபாய் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லெபனான் நாட்டின் சீதோன் என்ற நகரில் ஒரு மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வரும் மூதாட்டி தான் ஹஜ் வாபா முகமது அவத். இவரை அந்த பகுதியில் உள்ள எல்லாருக்கும் ஒரு பிச்சைகார மூதாட்டியாக தான் தெரியும். ஆனால் அவர் ஒரு கோடீஸ்வரி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அதிர்ச்சி அந்த பகுதி மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்துள்ளது. இந்த மூதாட்டி கடந்த 10 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தை அந்தப் பகுதியிலிருந்த ஜமால் டிரஸ்ட் பேங்க் வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஜே.டி.பி. வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. ஆனாலும் இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணம் வழங்கப்படுமென்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் ரியாத் சலாமே உறுதி அளித்தார்.அதன்படி இந்த மூதாட்டிக்கு அவர் கணக்கில் சேர்த்து இருந்த இந்திய கரன்சி மதிப்பின்படி 6 கோடியே 37 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகள் வழங்கப்பட்டன. அந்த காசோலைகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன பின்னர் தான் இந்த பிச்சைக்காரப் பாட்டி ஒரு கோடீஸ்வரன் என்ற ரகசியம் வெளிப்பட்டது. தற்போது இவர் அந்நாட்டு முழுவதும் பிரபலமாகி வருகின்றார்.

Categories

Tech |