துணை முதல்வர் பன்னீர் செல்வம் அம்மா கோவில் திறப்பு விழாவின் போது ஸ்டாலினை கடுமையாக கலாய்த்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட அம்மா கோவிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், “ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு செய்த திட்டங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த இந்த ஒரு யுகம் போதாது.
மேலும் அதிமுகவின் இரு பெரும் தலைவர்கள் மக்கள் மனதில் குடி கொண்டுள்ளதால், ஜெயலலிதாவின் புகழுக்கு வலுசேர்க்கும் விதமாக கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெற்றி பெற தீயசக்தி வடக்கிலிருந்து ஆள் பிடித்தார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் ஆடாத மேடை கிடையாது. போடாத வேஷமும் கிடையாது. 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வராமல் திமுகவினர் கை நமத்து பொய் இருக்கிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் காஞ்சமாடு கம்பிலே ஏறிய கதை ஆகிவிடும்” என்று ஓபிஎஸ் கிண்டலாக கூறியுள்ளார்.