Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

100கோடியை நெருங்கிடுச்சி…. ஒளிவிளக்கில் ஜொலித்த ஆலயம்…. திரண்டு வந்த பொதுமக்கள்…!!

பிரகதீஸ்வரர் ஆலயம் தேசியக்கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்படிருப்பதை கண்டு பொதுமக்கள் ரசித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப்புகழ் வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மாமன்னர் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது. அதன்பின் ஒரே கல்லால் ஆன அந்த சிவலிங்கம் 13 அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இதனையடுத்து யுனெஸ்கோவால் இந்த கோயில் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

பின்னர் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியதை கொண்டாடுவதற்காகவும், இது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்திய அளவிலான 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் இந்திய தொல்லியல் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் விதமாக தேசியக் கொடி போன்ற நிறங்களிலான விளக்குகளின் ஒளியில் ஆலயம் ஜொலிப்பதை கண்டு ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்துள்ளனர்.

Categories

Tech |