Categories
மாநில செய்திகள்

100க்கு 60 பேர்… வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம்… சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்..!!

100க்கு 60 பேர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையில் மற்றும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் சென்னையில் 100 பேருக்கு கொரோனா உறுதியானால் அதில் 60 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் குடும்பத்தினர் வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தயாராகும் 13வது கொரோனா சிகிச்சை மையத்தில் முதற்கட்டமாக 250 பேருக்கு படுக்கை தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |