Categories
அரசியல் மாநில செய்திகள்

100ரூபாயில் 40ரூபாயை எடுத்துகிறீர்கள்…. பாவப்பட்ட கூட்டமாக மாத்திட்டாங்க…. மக்களை நினைத்து சீமான் வேதனை ..!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த சீமான், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொள்வதற்கு குடும்ப தலைவிக்கு ஒரு வேலை கொடுத்தால் சம்பாதிக்க போறாங்க. நான் வேலூர் சிறையில் இருக்கும்போது பொதிகை மட்டும் தான் வரும். அதுல ஒரு விளம்பரம் வரும்… கிராம பஞ்சாயத்து திட்டத்திலே சேருங்கள், நூறு ரூபாய் வாங்கி அருகிலிருக்கும் வங்கியில் சேமித்து பணக்காரராகி விடுங்கள் என விளம்பரம் வரும். நூறு ரூபாய் வாங்கி சேமிச்சு இவர் பணக்கார ஆயிடுவாரு. அவுங்க லட்ச லட்சமா கொள்ளை அடிச்சு ஏழை ஆயிடுவாங்க.

நூறு ரூபாய்யில்40 ரூபாய் வேலை கொடுக்கிறவர் எடுத்துக்கொள்வார். 60 ரூபாய்  கைக்கு வரும். பாவப்பட்ட கூட்டமாய் மக்கள் ஆக்கி விடுகிறார்கள். உழைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளியே ஏறிடுச்சுன்னு எப்படி  வாழும் ? விவசாயத்துக்கு ஆள் இருக்கா ? இல்லை. இதனால் தான் அந்த நிலைமை வந்துடுச்சு. முன்னாடி கருது அறுக்க வருவாங்க, களை எடுக்க வருவாங்க, கரும்பு  வெட்ட  வருவாங்க, இப்போ அந்த வேலைக்கு ஆள் இல்ல. இத்தனை வருஷமா இந்த நூறு நாள் திட்டம் இருக்கு.

எத்தனை கோடி மரங்களை நட்டு இருக்கலாம் ? எவ்வளவு ஏரி-  குளங்களை தூர் வாரி இருக்கலாம். அப்போது அதற்கு கூட அந்த உழைப்பை நீங்க ஈடுபடுத்த மாட்டேங்குறீங்க. அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திப்பார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள். அப்படி அடுத்த தலைமுறைகான தலைவர்கள் தேவைப்படுகிறது. அதுதான் இங்கே பிரச்சனையாக இருக்கு. தேமுதிக பக்குவம் இல்லாத கட்சி என்று இப்போதுதான் தெரியுதா ? போன தடவை கூட்டணி வச்சு இருந்தப்ப தெரிலையா ?

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச விதை, உரம் கொடுப்பீர்களா ? என்ற கேள்விக்கு, விதை என்னிடம் எங்க இருக்கு. விதையை தான் விற்று விட்டீர்களே… நான் தற்போது விதைகளை சேமித்துக்கொண்டு இருக்கின்றேன். நெல் ஜெயராமன் போல கொஞ்ச பேர் சேர்த்துக்கொண்டு இருக்காங்க. அதை வச்சி பெருக்கி பிறகு செய்யணும். பாரம்பரிய நெல் விதைகளை தேடி பிடிக்க வேண்டும். மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினுடைய தலைவர் நாடு முழுவதும் பயணம் செய்து, 22,972 விதை வகைகளை சேர்த்து வைத்து இருந்தார்.

2003இல் சின்சண்டல் நிறுவனத்திற்கு ஒரே இரவில் எடுத்து கொடுத்து விட்டது இந்தியா. அதற்க்கு அன்றைக்கு  நாடே போச்சடா என எங்க அப்பா நம்மாழ்வார் அழுதார். தக்காளி விதை இல்லை, வெள்ளரி விதை இல்லை, வெண்டைக்காய் விதை இல்லை எல்லா விதையை இந்திய அரசு வித்துடுச்சு. இப்போ அதை வாங்கி நாம விதையை போட்டால் மூளை வைத்தோம் . விளக்கி வைத்தோம் என்றால் அது முளைக்கும் . அதில் விதை இருக்கிறது . திருப்பி போட்டோம் என்றால் நினைக்குறேன் மரபணுவை மாற்றிவிட்டார்கள் என சீமான் வேதனை தெரிவித்தார்.

Categories

Tech |