Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

100வது போட்டியில் இரட்டை சதம்… 8000 ரன்கள்…. 8ஆவது வீரர்…. டெஸ்டில் வார்னர் சாதனை.!!

டேவிட் வார்னர் அவரது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும்..

இந்நிலையில் முதல் இன்னிங்க்சில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான உஸ்மான் கவாஜா 1 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க  வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கைகோர்த்து பொறுப்பாக ஆடினர். இதில் மிகச் சிறப்பாக ஆடிய வார்னர் சதம் விளாசினார். வார்னர் சதம் அடித்ததன் மூலம் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை (144 பந்து 100 ரன்) அடித்து அசத்தினார். அதே சமயம் 85 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.

ஆனால் வார்னர் சதத்தோடு அப்படியே நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அவர் அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் விளாசினார். இந்த இரட்டை சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8,000 ரன்களை கடந்த 8ஆவது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார். சதம் அடித்து விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த போது வார்னருக்கு காலில் தசை பிடித்ததாக தெரிகிறது. இதனால் அவர் 200 (254) ரன்களில் ஒய்வு பெற்றார்.. ஆஸ்திரேலிய அணி 363/3 என ஆடி வருகிறது. தற்போது டிராவிஸ் ஹெட் 34, கேமரூன் கிரீன் 6 என இருவரும் ஆடி வருகின்றனர்.

Categories

Tech |