புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரயில் நிலையத்தின் அடையாளமாக முக்கிய ரயில் நிலையத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தேசிய கோடி அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றது. அந்த கொடி கம்பமானது 100 அடி உயரத்தில் கம்பமும், 30 அடி நீளம் மற்றும் 20 அடி அகலத்தில் கொடி அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த தேசிய கொடி கம்பம் தொடக்க நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ரயில் நிலைய அதிகாரி மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.