Categories
உலக செய்திகள்

100 அடி உயரத்தில் விழுந்த டிரக்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த அற்புதம்…. உயிர்தப்பிய ஆச்சர்ய நிகழ்வு…!!

அமெரிக்காவில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து டிரக் கீழே விழுந்தபோது ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டிரக் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் நேரத்தில் அந்த டிரக்கின் பின்பகுதியில் தொங்கி கொண்டிருந்த சங்கிலி திடீரென பாலத்தின் மீது இருந்த கம்பியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த டிரக் பாலத்தில் இருந்து கீழே விழாமல் தலைக்கீழாக தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதை கண்ட ஒரு போலீசார் அந்த டிரக் கீழே விழாமல் இருக்க ஒரு சங்கிலியை எடுத்து அதன் ஒரு முனையை அந்த டிரக்கின் மீதும்  மறுமுனையை பாலத்தின் மீதும் இறுக்கி கட்டியுள்ளார்.

அதன் பின்னர் அவர்  காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார்.அத்தகவலின் பேரில்  விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அந்த டிரக்கில் இருந்த 67 வயதுடைய ஒரு ஆண், 64 வயதுடைய ஒரு பெண் மற்றும் 2 நாய்குட்டிகளையும் காப்பற்றியுள்ளனர். இதனிடையே சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழக்கூடிய டிரக் விழாமலும், அதில் பயணம் செய்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |