100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்துவரும் கணேசன், சேவியர் காலனியில் சொந்தமான நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி இருக்கிறது. இதற்கு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பயனில்லை. இதுதொடர்பாக அவர் வழக்கும் தனக்கு இதுவரையிலும் நியாயம் கிடைக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி 100 அடி நீர் தேக்கத் தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
பின்னர் போலீசார் வந்து அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கிவிட்டனர். அதன் பின்னும் இழப்பீடு கிடைக்காததால் இன்று மனைவி மகளுடன் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 100 அடி உயரத்தில் ஒரு குடும்பம் போராட்டம் நடத்தியதால் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மூன்று பேரையும் சமாதானப்படுத்தி கீழே இறங்கியுள்ளனர். இதற்கு மேலும் இழப்பீடு தர வில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு அகதிகளாக எங்காவது போக போகிறோம் என்று கணேசன் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.