Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, ஆம்புலன்ஸ்…. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் இருந்து லாரி ஒன்று நேற்று முன்தினம் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் கிளீனரான சிவகுமார் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைபாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அப்போது பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது லாரி மோதி நின்றதால் விக்னேஷும், சிவகுமாரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்றனர். ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை சக்திவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் மருத்துவ உதவியாளர் முத்துராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பள்ளத்தில் விழுந்த லாரியை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆம்புலன்ஸ் நகர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆம்புலன்ஸில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மற்றும் ஆம்புலன்ஸை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |