Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

100 ஆண்டுகள் இல்லாத வகையில்…. கோவிலுக்குள் புகுந்த மழைநீர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைக்குளம்பட்டி  போன்ற பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையில் ராஜபாளையத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.இந்நிலையில்  வாகைகுளம்பட்டி  கண்மாய் நிரம்பி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து சேதமடைந்த வீடுகளை  ஆய்வு செய்தனர்.

பின்னர் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை இயந்திரம் மூலம் வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சாமி கோவிலுக்குள்  100 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து கோவில் நிர்வாக அதிகாரி ஜாபர், தக்கார் இளங்கோவன் ஆகியோர் தீயணைப்பு துறையினர் உதவியோடு கோவிலுக்குள் புகுந்து தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

Categories

Tech |