குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் சமீபத்தில் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவற்றில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த முகமூடி நபரை கண்டுபிடிப்பதற்காக 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் அடிப்படையில் ஒரு நபர் சென்றது கண்டறியப்பட்டு உள்ளது. அதன்பின் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அந்நபர் 24 வயதுள்ள பிரபல மல்யுத்தவீரர் என தெரியவந்தது.
இவர் 2016, 2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் மாநில அளவில் நடைபெற்றுள்ள 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர் தான் முகமூடி அணிந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு இருப்பதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் இதுகுறித்து வேறு எந்த பெண்ணும் புகாரளிக்க முன்வரவில்லை என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.