Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு” எல்லாரும் கண்டிப்பா வந்துருங்க…. முழுவீச்சில் களம் இறங்கிய அதிகாரிகள்…!!

நெல்லையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் துவங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் ஆங்காங்கே தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு பேரணி, ஆட்டோவில் சென்று தேர்தல் விழிப்புணர்வு கூறுதல், மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை நெல்லை மாநகர போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி தாசில்தார் மற்றும் தேர்தல் நடத்தும் உதவியாளர் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேலான பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Categories

Tech |