நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக கொரோனா தொற்று இல்லாததால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலகத்தில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சில நாடுகளில் தற்பொழுது மெல்ல மெல்ல குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் மேலான மக்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்றால் பிரேசில் நாட்டில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து, தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
சென்ற 100 நாட்களாக அங்கு ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் நியூசிலாந்து வென்றுள்ளது என்றாலும் அந்நாட்டு மக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதும் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதும் அரசுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.