Categories
மாநில செய்திகள்

100 நாட்களில் நிறைவேற்றிய தளபதி…! பெருமையோடு சொன்ன கனிமொழி…!!

கோவில்பட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை, அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் வெகுவிரைவில் நிறைவேற்றி தரும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கின்றார். அத்திட்டத்தின் படி நம்முடைய மாவட்டத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் வழியாக 56 பேருக்கு, பட்டா மாறுதல் 20 பேருக்கு, மின்னணு குடும்ப அட்டைகள் 6 பேருக்கு,  நல்ல நிலவர திட்ட பட்டா 10 பேருக்கு,  வேளாண்மை துறையில் உள்ளவர்கள் 5 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா ஐந்து பேருக்கு என்று 111 பேருக்கு இந்நிகழ்வில் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அதனடிப்படையில் இந்நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

முதலமைச்சர் தளபதி அவர்கள் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து பல்வேறு இடங்களில் மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் அவ் மனுக்களின் மீது எல்லாம் நடவடிக்கைகளை எடுத்து உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை எல்லாம் அரசாங்கம் மூலம் நிறைவேற்றித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

அதனடிப்படையில் தன் பதவியை ஏற்றுக்கொண்ட உடன் அதற்காக தனித்துறை ஒன்றை அறிவித்து, அத்துறையின் வழியாக மக்கள் தந்து இருக்கக்கூடிய கோரிக்கைகளை அனைத்தும் 100 நாட்களில் நிறைவேற்றித் தந்தார். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் முதன்மை வகித்தது என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்.

அதற்கு முழுமுதல் காரணமாக இருக்கக்கூடிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்களை இவ் மேடையில் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |