தாய்லாந்தில் 100 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் சில நாடுகள் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், தற்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறை தண்டனையில் தற்போது சிறையில் இருக்கின்றார்.
அந்த நபருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிய நிலையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு பரிசோதனை மேற் கொள்வதற்கு முன்னர் 30 பேருடன் அவர் தொடர்பில் இருந்திருக்கிறார். அதனால் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில், அதில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு துறை இயக்குனர் ஜெனரல் கூறுகையில், ” எங்கள் நாட்டில் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், உள்ளூர் தொற்றால் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.