பாலிவுட் படஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தமிழன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018ம் வருடம் பாடகர் நிக்ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் இருவரும் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்தனர். இந்த நிலையில் அன்னையர் தினத்தில் அவருடைய குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “சென்ற சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமான நேரங்கள் குறித்து சிந்திக்காமல் இருக்க இயலாது. கடந்த 100 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தையை இறுதியாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது ஆகும். எங்களது குழந்தை இறுதியாக வீடு திரும்பியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் அடுத்த அத்தியாயம் தொடங்கி இருக்கிறது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இப்பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.