Categories
சினிமா தமிழ் சினிமா

”100 நாள் ஆகியும் குறையாத மாஸ்” தெறிக்க விடும் தளபதி புள்ளிங்கோ

தீபாவளிக்கு  ரிலீஸாகிய பிகில் திரைப்படம் தொடர்ச்சியாக 100 நாட்களை எட்டியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகி  மக்களிடம்  பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் பிகில். இத்திரைப்படம் பெண்களின் திறமையை  வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது.

கால்பந்து ஆட்டத்தை மையமயமாக கொண்டு எடுக்கப்பட்ட  இத்திரைப்படத்தில் தளபதி விஜய் டபுள் ஆக்ட்டில் நடித்துள்ளார். தளபதியின் அதிரடி ,காமெடி, லவ்,செண்டிமெண்ட் என மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக உள்ளது.

பிகில் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும்   யோகிபாபு, கதிர்,  ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது பிகில்  திரைப்படம் 100-வது நாளாக திரைஅரங்குகளில் ஓடி  ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . இதனை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக #Bigil100days என்ற ஹாஷ்டகை ட்விட்டரில் ட்ரெண்டிங்  செய்து கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |